Saturday, March 15, 2025 12:24 pm
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடி வசூலை எட்டும் நிலையில் உள்ளது.
பெப்ரவரி 21, ஆம் திகதி வெளியான இந்த படம் பரவலான பாராட்டையும், வலுவான ஆதரவையும் பெற்றுள்ளது.
டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் , மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
இது பொறியியல் படித்த ஒருவரின் நேர்மையற்ற வெற்றியின் பயணம் மற்றும் அதன் விளைவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
படத்தின் பட்ஜெட் ₹36 கோடி. ஏற்கனவே ₹90 கோடி வசூலித்துள்ளதாகவும், விரைவில் ₹100 கோடியை எட்டும் என்றும் தொழில்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

