சனிக்கிழமை இரவு கனடாவின் தெற்கு ஒன்ராரியோவில் 15 தொடக்கம் 20 சென்ரிமீற்றர் அளவிலான பனிப்பொழிவு பதிவு செய்யப்பட்டது.
இதனால் பல பொதுப் போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன. பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலும் 35 விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. 32 விமான சேவைகள் தாமதமாகின.
இந்த பனிக்காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பனிப்பொழிவு இதுவாகும்.