அமெரிக்க மினியப்பலஸ் நகரில் இருந்து ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் தரையிறங்கிய டெல்டா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட விபத்தின் பின் தலைகீழாக திரும்பியது. திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இது நிகழ்ந்தது.
மொத்தம் 80 பயணிகளில், ஒரு சிறுவயது பயணி உட்பட 18 பேர் காயமடைந்தனர். உயிராபத்து எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தீப்பற்றி எரிவதாகவும் அறியப்படுகிறது.
கடந்த சில தினங்களாக பனிப்பொழிவுடனும் காற்றுடனும் கூடிய சீரற்ற காலநிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.