ருமேனியாவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதிப் போட்டியில் முன்னணி வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி காலின் ஜார்ஜெஸ்குவின் வேட்புமனுவை ருமேனியாவின் மத்திய தேர்தல் பணியகம் நிராகரித்தது. ஆனால் நிராகரிப்புக்கான காரணங்களை வெளியிடப்படவில்லை.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ருமேனியாவின் மத்திய தேர்தல் தலைமையகத்திற்கு வெளியே போராட்டங்கள் வெடித்தன, அங்கு ஜார்ஜெஸ்குவின் ஆதரவாளர்கள் பாதுகாப்பு வேலிகளை மீறி உள்ளே நுழைந்தனர். சுற்றிவளைப்பைத் தாண்டிச் செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.