அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவும், 2027 ஆண்கள் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயாராவதற்கும் சர்வதேச ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மிட்செல் ஸ்டார்க்அறிவித்துள்ளார்.
ஆடம் ஜாம்பாவுக்குப் பிறகு, அவ்ஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக T20 விக்கெட் வீழ்த்திய வீரராக விளங்குகிறார் ஸ்டார்க்.2012இல் பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடங்கிய 65 போட்டிகள் கொண்ட தனது வாழ்க்கையில், 7.74 என்ற எகானமி ரேட்டில் 79 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐந்து ரி 20 உலகக்கிண்ணப் போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க் விளையாடினார். காயம் காரணமாக 2016 ஆம் ஆண்டு ரி20 உலகக்கிண்ணப் போட்டியைத் தவறவிட்டார். மேலும் 2021இல் துபாயில் அவுஸ்திரேலியாவின் பட்டத்தை வென்ற வெற்றி ஆட்டத்தின் முக்கிய நபராக இருந்தார்.