ராஜகிரியவில் உள்ள ஒரு பாதுகாப்பு உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகக் கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மேலும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
நிலைமையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.