ரஷ்யாவிற்கு எதிரான “இரண்டாம் கட்ட” தடைகளுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை சூசகமாக தெரிவித்தார்.
இது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும் இந்தியா போன்ற நாடுகளையும் பாதிக்கக்கூடும்.
சமீபத்திய வரலாற்றில் ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திய பின்னர், குறிப்பாக உக்ரைன் தலைநகர் கியேவில் உள்ள ஒரு முக்கிய அரசாங்க வளாகத்தைத் தாக்கிய பின்னர் இந்த அறிக்கை வந்தது.
ரஷ்யா அல்லது அதன் எண்ணெய் வாங்குபவர்கள் மீது புதிய சுற்றுத் தடைகளுக்குத் தயாரா என்று வெள்ளை மாளிகையில் கேட்டதற்கு, ட்ரம்ப் கூடுதல் விவரங்களை வழங்காமல், “ஆம், நான் தயாராக இருக்கிறேன்” என்று சுருக்கமாக பதிலளித்தார்.