தெமட்டகொட பகுதியில் ரயிலொன்றில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரபு நாட்டோடு இணைக்கப்பட்ட QR குறியீடு கொண்ட ஒரு பை ஒன்றிற்குள் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அன்றைய தினம் துறைமுகம் மற்றும் விமான நிலையம் வழியாக நாட்டிற்குள் வந்தவர்கள் தொடர்பில் பொலிசார் தகவல்களை கோரியுள்ளனர்.
புத்தளம் மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான அனைத்து ரயில் நிலையங்களிலிருந்தும் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புத்தளத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயிலின் கழிப்பறையில் பணியாளர் ஒருவரால் அண்மையில் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.