புனித ரமழான் மாதத்தில் உள்நாட்டு பயணிகளுக்கான விமானக் கட்டணங்களைக் குறைக்கவும், பல முக்கிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்களைக் குறைக்கவும் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ உத்தரவிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட இந்தோனேசியாவில் சனிக்கிழமை ரமழான் தொடங்கும். புனித மாதமும் அதைத் தொடர்ந்து வரும் ஈத் அல்-பித்ர் கொண்டாட்டமும், மில்லியன் கணக்கான இந்தோனேசியர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைய பயணம் செய்யும் போது, உள்நாட்டில் முடிக் என்று அழைக்கப்படும் வீடு திரும்பும் பாரம்பரியத்துடன் நெருக்கமாக தொடர்புடையது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு விமானக் கட்டணக் குறைப்புகள் அமலில் இருக்கும் என்றும், இந்த ஆண்டு ஈத் அல்-பித்ர் ,பாலி அமைதி தினத்தின் போது பல முக்கிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் குறைக்கப்படும் என்றும் ஜனாதிபதி பிரபோவோ அறிவித்தார்.