மியன்மாரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஆகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இராணுவம் உட்பட மருத்துவக்குழுவை மியன்மாருக்கு அனுப்புமாறும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி,
மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாகவும், அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களை அனுப்புமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் கூறியுள்ளார்.