குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
50 இலட்ச ரூபாய் பெறுமதியிலான மூன்று சரீர பிணையில் இவர் விடுவிக்கபட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய குழுவினரின் பரிந்துரைக்கு அமைவாக ரணில் விக்ரம சிங்க இன்று நீதிமன்றத்தில் முன்நிலையாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.