யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (23) நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“யாழ் . மண்ணே வணக்கம்” எனும் இசை நிகழ்வில் , தென்னிந்திய பிரபல பாடகர்களான மனோ , சைந்தவி , கார்த்திக் , தீப்தீ , இசையமைப்பாளர் சிற்பி ஆகியோர் தென்னிந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் (23) சனிக்கிழமை மாலை மாபெரும் இசை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் , திடீரென இசை நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இசை நிகழ்வுக்காக 10 ஆயிரம் ரூபாய் , 5 ஆயிரம் ரூபாய் , 3ஆயிரம் ரூபாய் மற்றும் 1,500 ரூபாய் ஆகிய விலைகளில் நுழைவு சீட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வு தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாகவும் , நிகழ்வு பிறிதொரு தினத்தில் நடத்தப்படும் எனவும் , அதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
