யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய துறையாக உருவாகியிருக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் துறை, ஆங்கிலத்தின் காலனிய நீக்கம் என்னும் கருப்பொருளில் தனது முதலாவது சர்வதேச மாநாட்டை எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடாத்த திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், நியூசிலாந்து ஒக்லாண்ட் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழகம், ஹொங்கொங் பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து வருகைதரும் பேராசிரியர்கள் இம்மாநாட்டில் உரைகளை ஆற்றவுள்ளனர்.
இந்த மாநாட்டில் மொத்தம் 96 ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு நாட்டு ஆய்வாளர்களாலும் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.