யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் யானை தாக்கி இரு பெண்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது
யாழ் தாவடி பத்திரகாளி கோவில் நிகழ்வுகளுக்காக இரண்டு யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளது.
அவ்வாறு அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகளுக்கும் அருகாமையில் வெடி கொழுத்தபட்டு தீ சுவாலைகள் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் தரித்து நின்ற யானைகள் சிறுமி உட்பட இரு பெண்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் ஒருவர் கால் முறிந்தும் மற்றுமொருவர் யாழ் போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.