யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் சிரேஷ்ட மாணவர்கள் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் அந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.