மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய 2025 ஆண்டின் சர்வதேச மகளிர் தின விழா யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது.
“நிலையான எதிர்காலத்தை உருவாக்க அவள் வலுவான காட்டியாக இருப்பாள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் பிரதம விருந்தினராக மகளிர் விவகார அமைச்சர் சரோயா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டார்.