யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் எற்பாட்டில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் 164வது ஜனனதின நினை வேந்தல் யாழ் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதர அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது..
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதர் சாய் முரளி குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் திரு உவப்படத்திற்கான மலர்மாலை அணிவித்தார்.
குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக இந்திய கலை , கலாசாரம் மற்றும் பாரம்பரிய தளங்களைக் கொண்டாடும் வகையில் வட மாகாண மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடாத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.அதில் வெற்றி பெற்ற ஓவியங்கள் கண் காட்சியில் வைக்கப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டன.
1934 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தாகூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாண வருகையை நினைவு கூர்ந்த துணைத் தூதரக ஸ்தானிகர், யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் அவர் ஆற்றிய உரை உட்பட, அவரது கலை, சிந்தனை மற்றும் கலாசார ஒற்றுமையின் நீடித்த மரபு பற்றியும் உரையாற்றினார்.