யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவை கோரியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமருக்கும் 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களுக்கும் இடையே கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜெயசூர்யா இந்த வேண்டுகோளை விடுத்தார்.
சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ஜெயசூர்ய, இந்த சந்திப்பை “உண்மையிலேயே மறக்கமுடியாத மற்றும் ஊக்கமளிக்கும் அனுபவம்” என்று விவரித்தார், மேலும் சவாலான காலங்களில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள முன்மொழியப்பட்ட மைதானம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.