இலங்கை – கனடா வர்த்தக சம்மேளன த்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மிகப்பிரமாண்டமான முறையில்
கனடா கல்விக் கண்காட்சி நடைபெற வுள்ளது.
வலம்புரி ஆடம்பர விருந்தினர் விடுதியில்
மே 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் கனடா கல்விக் கண்காட்சி , யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக 2025 என்ற கண்காட்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஏற்பட்டுக்குழுவினர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் முதலீடு மற்றும் வர்த்தக கண்கட்சியானது இரு நாள்களை கொண்டதாக நடைபெறவுள்ளது.வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் – எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. இதில் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்களுள்ளதுடன் துறைசார் காள்விகளுக்கும் விளக்கங்கள் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் பிற்பகல் 2.00 மணிக்கு ஜெற்வின் ஆடம்பர விடுதியில் முதலீடு மற்றும் வர்த்தக கண்காட்சி ஆரம்பமாகவுள்ளதுடன் இதில் வடக்கின் ஆளுநர் உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும் கலந்து பங்கேற்று சிறப்பிக்கவுள்ளனர் என்றார்கள்.