யாழ்ப்பாணத்தில், பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சனின் ஏற்பாட்டில் ஐந்து இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
யாழ்ப்பாணம் சின்னக்கடை பகுதி, கோப்பாய் , வேலணை உள்ளிட்ட இடங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த கால பகுதியில் பொருளாதார தடைகள், யுத்தத்தின் உக்கிரங்களால், ஒருவேளை சாப்பாட்டிற்கே மக்கள் பெரும் இடர்களை சந்தித்து வந்தனர்.
அதன் போது அவர்களின் பசியாற்றியது உப்பில்லா கஞ்சியே.
அந்த மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை எமது அடுத்த சந்ததிகளுக்கும் கடத்தும் முகமாகவே முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.
முள்ளிவாய்க்கால் வாரத்தில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கொள்கிறோம் என சுலக்சன் தெரிவித்தார்.