யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் இன்று காலை ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ராணுவப் புலனாய்வுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளபட்ட நடவடிக்கையில் குறித்த பகுதியில் பழைய வீடொன்றுக்குள் மறைத்து வைக்கப்படிருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நடவடிக்கையில் யாரும் கைதுசெய்யப்படவில்லை.
75 கிலோ கிராமுக்கும் அதிகமான குறித்த போதைப்பொருள் வல்வெட்டித்துறை பொலிசாரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் வல்வெட்டித்துறை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.