Friday, August 22, 2025 11:01 am
யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்டபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதையடுத்து, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, இன்று (22) யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது, முப்பது T-56 ரக துப்பாக்கிகளும், அவற்றிற்கு பயன்படுத்தப்படும் 5,000 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த ஆயுதங்கள் பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

