Wednesday, April 30, 2025 6:53 am
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சளைப் பொலிஸார் கைப்பற்றியதுடன் 25 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு கைமாற்றும் போதே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான சந்தேக நபரை ஊர்காவாற்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

