Monday, August 4, 2025 6:08 am
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் – மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் தம்பதியினரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை அவர்களின் உடைமையில் இருந்து 90 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

