Wednesday, March 26, 2025 5:59 am
வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் நடத்திய போராட்டத்தை பொலிஸார் தடுத்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணியை பொலிஸாரால் தடுக்கப்பட்ட போதும் அவர்கள் முன்னோக்கி சென்றனர்.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பேரணிகள் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளதால் பொலிஸாரால் பேரணி தடுக்கப்பட்டது.

