Tuesday, July 29, 2025 8:23 am
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ள சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


