யாழ்ப்பாணத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 30ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கோணேஸ்வரன் (66) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபருக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் இருந்துள்ளன.
இதனால் மனவிரக்தி அடைந்த அவர், கடந்த 30ஆம் திகதி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இச்சம்பவம் தொடர்பான சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் பதிவு செய்தனர்.