வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக நேற்று மாலை ஆரம்பித்த பேரணி யாழ் மாநகர சபை முன்பாக நிறைவடைந்தது.
இதன்போது யாழ் மாநகர சபைக்கு முன்பாக திறக்கப்பட்ட அசைவ கடைக்கு எதிராகவும் போராட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
குறித்த போராட்டத்தில் சைவ சமய தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சைவ சமய ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.