மருதனார்மடம், காங்கேசன்துறை வீதியில் இன்றையதினம் (10) மூன்று மோட்டார் சைக்கிள்களும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து பக்கம் மாறி வலது பக்கம் சென்று எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கியவர்களில் ஐந்து பேர் காயங்களுக்குள்ளாகி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.