வவுனியாவைத் தளமாக கொண்டு இயங்கும் சேவாலங்கா நிறுவனமானது யப்பானின் அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி உதவியுடன் வடமாகாணத்தில் 95 பாடசாலைகளை புனரமைத்தல் மற்றும் புதிதாக நிர்மாணித்தல் வேலைத் திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தின் மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் ஒன்றினை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யப்பானில் இருந்து வருகை தந்த நிப்பொன் பவுண்டேசன் உயர் அதிகாரிகள் சேவாலங்கா நிறுவனத்தினர் ஆகியோர் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்திற்கு விஜயம் செய்து சேதமடைந்த கட்டிடத்தை பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது.