இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியத் திரைப்படத் துறைக்கு அவர் அளித்த பங்களிப்பைப் பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்படுகிறது.
லாலேட்டன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லால், தீவிரமான, நுட்பமான , நகைச்சுவையான கதாபாத்திரங்களில் மிக எளிதாக நடிக்கும் திறமைக்காகப் புகழப்படுகிறார்.
350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் திறமையால் முத்திரை பதித்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதுதை இரண்டு முறை பெற்றுள்ளார். ம் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராட்டியுள்ளது.
இந்த விருது செப்டம்பர் 23 அன்று நடைபெறும் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் வழங்கப்படும்.