Thursday, February 5, 2026 8:03 am
குவாரா மாநிலத்தின் வோரோ , நுகுவில் செவ்வாய்க்கிழமை ஆயுதம் ஏந்தியவர்கள் நடத்தியதாக்குதல்களில் சுமார் 162 பேர் இறந்ததக அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் முகமது உமர் பயோ தெரிவித்தார்.இஸ்லாமிய அரசுடன் இணைந்த ஆயுதக் குழுவான லகுராவா இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக அவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.
துப்பாக்கிதாரிகள் குடியிருப்பாளர்களைச் சுற்றி வளைத்து, அவர்களின் கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டி, அவர்களைக் கொன்றதாகக் கூறினார். தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகளையும் கடைகளையும் தீக்கிரையாக்கினர். “நான் இப்போது உங்களிடம் பேசும்போது, நான் இராணுவ வீரர்களுடன் கிராமத்தில் இருக்கிறேன், இறந்த உடல்களை வரிசைப்படுத்தி, சுற்றியுள்ள பகுதிகளை மேலும் தேடுகிறேன்,” என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
ஜிஹாதிகள், பிற ஆயுதக் குழுக்களால் மீண்டும் மீண்டும் பரவலாக வன்முறைச் சம்பவங்களை நடத்துகின்றனர்.

