மூதூர் படுகொலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வு பூர்வமாக யாழ்ப்பாணத்திலும் நேற்று மாலை (04) அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண புதிய பேருந்து நிலையம் முன்பாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
திருகோணமலை மூதூரில் இருந்த பிரான்ஸ் நாட்டின் தன்னார்வ தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் நிறுவனத்தில் பணியாற்றிய 17 பேர் கடந்த 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது முன்னணியின் முக்கியஸ்தர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.