ரமழான் பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 1, 2025 அன்று அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் பாடசாலை விடுமுறை அளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 31ஆம் திகதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிகமாக ஏப்ரல் முதலாம் திகதியும் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக பாடசாலை இடம்பெறும் மாற்றுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவின் நோக்கம் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மத கொண்டாட்டங்களில் முழுமையாக பங்கேற்க வைப்பதை அடிப்படையாகக் அடிப்படையாகக் கொண்டது.
