அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் இயங்கி வருகின்ற முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு சுகாதார அபிவிருத்தி தொடர்பான ஆலோசனை வழிகாட்டி விழிப்புணர்வு கருத்தரங்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாழக்கிழமை (27) அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெற்றது.
முன்பள்ளி பாடசாலை எவ்வாறு அமையவேண்டும், அப்பாடசாலையில் எவ்வாறான விடயங்கள் உள்ளடங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் வழங்கினார்.
சிறுவர்களுக்கான பாதுகாப்பு, அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புகள் போன்றவற்றை எவ்வாறு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான நற்பண்புகள், நல்லெண்ணங்கள், நற்சிந்தனைகள் போன்றவற்றை எவ்வாறு போதிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான போசாக்கு நிறைந்த உணவுப் பழக்கவழக்கங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் எடுத்துரைத்தார்.
இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அட்டாளைச்சேனை பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள், பொறுப்பதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.