இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் முக்கிய அதிகாரியாக அறியப்பட்ட பிரட்மன் வீரக்கோன் தனது 94 ஆவது வயதில் காலமானார்.
1954ஆம் ஆண்டில் இலங்கை சிவில் சேவையில் இணைந்து நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றியுள்ளார். பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் செயலாளராக பதவியேற்று, பின்னர் 2002 வரை தெரிவான 7 பிரதமர்கள், இரண்டு ஜனாதிபதிகளின் கீழ் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
பிரட்மன் வீரக்கோன் தனது ஆரம்பக் கல்வியை களுத்துறை ஹோலி கிரோஸ் கல்லூரியில் மேற்கொண்டார். குருதலாவ புனித தோமஸ் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசித்தார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் கௌரவப் பட்டத்தையும், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Fulbright புலமைப்பரிசிலைப் பெற்று சமூகவியலில் முதுகலைப் பட்டம் (MA) பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Trending
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!
- “ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!
- ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இத்தாலி தகுதி பெற்றது.
- இளையராஜாவிற்கு பதிலடி கொடுத்த வனிதா!
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் சுற்றுச்சூழல் பேரழிவை ஜனாதிபதி விசாரிக்க வேண்டும்
- காமன்வெல்த் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளின் பின் மின்சாரம்!
- கபில்தேவ் சாதனையை முறியடித்த பும்ரா!