முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனவரி 1, 2024 முதல் செப்டம்பர் 24, 2024 வரையிலான ஒன்பது மாதங்களுக்குள் ரூ. 33 மில்லியன் மதிப்புள்ள எரிபொருளைப் பயன்படுத்தினார், இது மாதத்திற்கு ரூ. 4 மில்லியன் என்று சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய சபாநாயகர் ஜனவரி மாதத்திற்கான எரிபொருளுக்காக . 218,000 ரூபாமட்டுமே செலவிட்டுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் ஒன்பது வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் ஒன்பது மாதங்களுக்கு அவரது எரிபொருள் செலவு 333 மில்லியன் ரூபா, துணை சபாநாயகர் ஆறு வாகனங்களைப் பயன்படுத்தி 13.5 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளார்.
முன்னாள் குழுக்களின் துணைத் தலைவர்கள் நான்கு வாகனங்களைப் பயன்படுத்தி எரிபொருளுக்காக 7.2 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளனர்.
தற்போதைய துணை சபாநாயகர் எரிபொருளுக்காக 23,000 ரூபா மட்டுமே பயன்படுத்தியுள்ளார். குழுக்களின் துணைத் தலைவர்கள் ஜனவரி மாதத்திற்கு 81,000 ரூபாமட்டுமே எரிபொருளுக்காகப் பயன்படுத்தியுள்ளனர்.
சபாநாயகரின் பங்களாவைப் பராமரிக்க 70 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். முன்னாள் சபாநாயகரின் பங்களாவின் உணவுச் செலவு 2023 இல் 2.6 மில்லியன் ரூபாவும், 2024 இல் 3.6 மில்லியன் ரூபாவும் செலவளிக்கப்பட்டது.
தற்போதைய சபாநாயகரின் உணவுச் செலவு ஜனவரி மாதத்திற்கு 33,000 ரூபாமட்டுமே செலவாகி உள்ளது என்றார்.
பணியாளர் ஆலோசனைக் குழுவின் முடிவின் பேரில் நடத்தப்பட்ட தணிக்கை மூலம் இந்தத் தகவல் தெரியவந்ததாக அவர் கூறினார்.