Wednesday, November 12, 2025 8:21 pm
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா அமைச்சின் கீழ் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், இலங்கை ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம் ஆகியவை இயங்குகின்றது.
இவற்றின் ஊழியர்களுக்கான நேரடி மருத்துவ காப்பீட்டு ஏற்பாடுகள் தொடர்பான முறைகேடுகள் தொடர்பாகவே, பிரசன்ன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.
குறித்த காப்பீட்டுத் திட்டங்களைக் கையாளுவதற்கு தனியார் தரகு நிறுவனம் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த நிறுவனத்தால் இலங்கை காப்பீட்டுக் கழகத்திற்கு பெரும் இழப்பை ஏற்பட்டது. இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பிரசன்ன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

