Tuesday, April 15, 2025 6:35 am
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் பொங்கல், கைவிசேடம் வழங்குதல் என்பனம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை [14] நடைபெற்றது.
மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகளை அடுத்து யாழில் ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைதாவதற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியினர் யாழ்ப்பாணத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அமைச்சர் ஒருவர் சண்டித்தனத்திலும் ஈடுபட்டுள்ளார் எனவும் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார் .