ஜேர்மனியின் மியூனிக் நகரில் வியாழக்கிழமை ஒரு கார் கூட்டத்திற்குள் மோதியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தை ஒரு கொலை முயற்சியாக ஜேர்மன் வழக்கறிஞர்கள் கருதுவதாக வெள்ளிக்கிழமை வழக்கறிஞர்களுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்திய மியூனிக் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு சிறு குழந்தை உட்பட இரண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 24 வயதான ஆப்கானிஸ்தான் புகலிடம் கோருபவர் ஒருவர் நகர மையத்தில் நடந்த தொழிற்சங்க பேரணியில் வேண்டுமென்றே தனது காரை ஓட்டிச் சென்றதாக புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார்.