ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த நபர் 738 நாட்களுக்குப் பிறகு, தனது காதலியுடன் சேர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹமாஸின் பிடியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையான நபர், தனது காதலியை கண்டதும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலியரான நோவா அர்கமானியும், அவினாட்டனும் இரண்டு ஆண்டுகள். 738 நாட்கள். 17,712 மணிநேரத்தின் பின்னர் சந்தித்தனர். காஸாவில் நடந்து வந்த போர் முடிவுற்ற நிலையில், ஹமாஸின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் அவினாட்டனும் ஒருவர் ஆவார். ரெய்ம் கிராசிங்கில் உள்ள தனது வீட்டின் அறைக்குள் நுழைந்தபோது, அவர் நேராக தனது காதலி அர்கமானியின் கைகளை பற்னார். அந்த பெண் கடந்த ஆண்டு இஸ்ரேலிய படைகளால், ஹமாஸ் குழுவினரிடமிருந்து மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுதொடர்பான வீடியோவில், அந்த நபர் தனது அறைக்குள் நுழைந்ததுமே காதலியை கண்டு உணர்ச்சி வசப்பட்டு அவரை இறுக்கி அணைத்து மெத்தையிலேயே விழுந்தார். இருவரும் அணைத்தபடியே எழுந்து அமர அவனாட்டா கத்தி கதறியபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து தனது காதலிக்கு முத்தமழை பொழிந்துள்ளார். இந்த வீடியோவை இஸ்ரேலிய பாதுகாப்பு பிரிவானது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 7ம் தேகதி, மகிழ்ச்சியாக பொழிதை கழிப்பதற்காக் ஆர்கமானியும், அவினாடனும் நோவா இசை விழாவில் கலந்து கொண்டனர். ஆனால், அங்கு எதிர்பாராத விதமாக ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி, சிறைபிடித்தவர்களில் இந்த ஜோடியும் அடங்கும். இஸ்ரேல்-ஹமாஸ் போரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் ஒரு சமூக ஊடகப் பதிவில், அக்டோபர் 7 ஆம் திகதி இரவு நடந்த பயங்கரத்தை ஆர்கமானியும் நினைவு கூர்ந்தார்.
அதில், “ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஓடுகிறார்கள், நூற்றுக்கணக்கான கார்கள் தப்பிக்க முயற்சிக்கின்றன கொலை செய்ய வேண்டாம் என்று நாங்கள் அனைவரும் கெஞ்சுகிறோம். அக்டோபர் 7 அன்றுதான் நான் என் துணைவரை கடைசியாகப் பார்த்தேன். சிறைபிடிக்கப்பட்ட நிலையில், நான் சென்ற இடமெல்லாம் அவினாடனைப் பற்றிக் கேட்டேன். அவர் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பதில் தெரிந்து கொள்ள நான் பயந்தேன்,” என்று குறிப்பிட்டு இருந்தார்.
2023ம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் தொடர்பான வீடியோக்களில், அழுது தவித்துக் கொண்டிருந்த ஆர்கமானியை, ஹமாஸ் படையினர் ஒரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் வலுக்கட்டாயமாக அமர்த்தி காஸாவிற்குள் அழைத்துச் சென்றது பதிவாகியிருந்தது. சீனாவில் பிறந்த இஸ்ரேலிய குடியுரிமை பெற ஆர்கமானி, 245 நாட்கள் பணயக்கைதியாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் இராணுவத்தால் மீட்கப்பட்டார் . அப்போதிருந்து, பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக அவர் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். அமைதிக்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேலும் ஹமாஸும் உடன்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, “இந்தக் கனவு விரைவில் முடிவடையும், இறுதியாக நாம் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வோம் என்ற நம்பிக்கை எனக்கு ஒவ்வொரு நாளும் உள்ளது” என்று ஆர்கமானி தனது சமூக வலைதள கணக்கில் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று தங்களது குடும்பத்தை பிரிந்து தவித்து வந்த பலரும், மீண்டும் அவர்களுடன் இணைந்து மகிழ்ச்சி பொங்க ஆனந்த கண்ணீரில் மூழ்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.