2006 ஆம் ஆண்டு லியுகுமியாவால் (leukemia) உயிரிழந்த 15 வயது இத்தாலிய சிறுவன் கார்லோ அகுடிஸ்(Carlo Akutis), நவீன மில்லினியத்தின் முதல் கத்தோலிக்க புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அகுடிஸ் தனது நம்பிக்கையை மேம்படுத்துவதற்காக இணையதளங்களை உருவாக்கி, இளம் கத்தோலிக்கர்களை ஈர்த்து, கடவுளின் செல்வாக்கு செலுத்துபவர் என அறியப்பட்டார்.
இந்த நிலையில் புனித பீட்டர் சதுக்கத்தில் 70,000 வழிபாட்டாளர்கள் முன்னிலையில், போப் லியோ XIV, கார்லோ அகுடிஸை நவீன மில்லினியத்தின் முதல் கத்தோலிக்க புனிதராக அறிவித்துள்ளார்.