அநுராதபுரத்தில் மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பதலாகம பிரதேசத்தில் துப்பாக்கி, வாள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிஹிந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் மிஹிந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடையவர் ஆவார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வாள் மற்றும் 60 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- நாட்டில் 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் 6 பேர் பலி
- கைதானவர்களை அழைத்துவர இந்தோனேசியா சென்ற விசேட பொலிஸ் குழு
- செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
- வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினம் : யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
- சாவகச்சேரியில் இடித்து அகற்றப்பட்ட சுமைதாங்கி
- ஈட்டி எறிதலில் லெகாம்கேவிற்கு தங்கம்
- பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குள் பொலித்தீனுக்குத் தடை
- காபூலில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு