மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இன்னும் பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கக்கூடிய நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அஞ்சப்படுகிறது.
இதுவரை 1,644 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 3,408 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காணாமல் போயுள்ள 139 பேரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை மியான்மரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது.
மாண்டலே நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.