மியான்மரில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தில் சில வீதிகள் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மியான்மர் மற்றும் அதனை அண்டிய நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை பேரழிவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 1000க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் படி 5.1 அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மண்டலாய் நகரின் வடமேற்கே 13 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய வீதிகள் பிளந்து பாதிப்பு அடைந்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கிடைத்த தகவலின்படி, நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.