மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தை மின்வெட்டு காட்டுவதாவும், அதற்குப் பொறுப்பான எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுமார் ஏழு மணிநேரம் நீடித்த மின்வெட்டு ஏற்பட்டு 24 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், என்ன நடந்தது, தேசிய மின்வாரியம் ஏன் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தது என்பதற்கான தெளிவான தொழில்நுட்ப விளக்கத்தை அதிகாரிகள் இன்னும் வழங்கவில்லை.
மின்வெட்டு தொடர்பான விடயங்களை அரசாங்கத்தின் விரைவான கவனத்தையும் தலையீட்டையும் கோரி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப் போவதாக எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தெரிவித்தார்.
ஒரு குரங்கு மின்மாற்றியுடன் தொடர்பு கொண்டதாக ஜெயக்கொடி கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சுட்டிக் காட்டிய ரஹ்மான், அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எதுவும் தெரியாத ஒருவர், அமைச்சராக எப்படி செயல்பட முடியும்.
முன்னைய அரசாங்கங்களின் திட்டமிடப்படாத மற்றும் தொலைநோக்குப் பார்வையற்ற செயற்பாடுகள் மின்வெட்டுக்கு வழிவகுத்ததாகவும், தேசிய மின்வாரியத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு கடந்த காலங்களில் எந்தத் திட்டமும் செயற்படுத்தப்படவில்லை எனவும் அரசாங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ரஹ்மான், மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இனி ‘புதியதாக’ இல்லை என்றும், முந்தைய அரசாங்கத்தின் பொறுப்புகளை பொறுப்பேற்காமல் அரசாங்கம் கையாள வேண்டும் என்றும் கூறினார்.