மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
மினுவாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் நிறுத்த முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்துள்ள நிலையில் பொலிஸார் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
பின்னர் பொலிஸார் சந்தேக நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்த போது சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரியிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்ட நிலையில் சந்தேக நபர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் காயமடைந்ததுடன் மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி,
சட்டவிரோதப் பொருட்களுக்காக தனிநபர்களை சோதனை செய்ய அதிகாரிகள் முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்தது.
காயமடைந்த நபர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மற்றொருவர் கைது செய்யப்பட்டார்.