கம்பஹா, மினுவாங்கொடையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டினை முன்னெடுத்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பத்தண்டுவன சந்திக்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.