மாத்தறை – தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் தங்கள் நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு தமது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வான் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி பின்னர், இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் குறித்த வான் தீ மூட்டப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்யவும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைக் கண்டறியும் நோக்கிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.