Thursday, February 12, 2026 2:05 pm
சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்த கோரி வேலணையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் குறித்த போராடடம் இன்று வேலணை வங்ககாவடியில் நடைபெற்றது.
வங்களாவடி சந்தியில் ஆரம்பமான போராட்டம் நடைபவனியாக வேலணை பிரதேச செயலகம் வரை சென்றது.

“வறிய பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே”, “சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்த பொலிசாருக்கு துணைநிற்போம்”, ” வாழ்வாதாரத்தை பறிக்காதே”, “ஊர் கூடித் திருட்டை ஒழிப்போம்” உள்ளிட்ட கோசங்களுடன் சென்று பிரதேச செயலர் தனபாலசிங்கம் அகிலனிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்திருந்தனர்.
வேலணை பிரதேசத்தில் 420 இற்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட பண்ணையாளர்கள் இருகுகின்றார்கள். இவர்கள் சுமார் 3000 வரையான நல்லிப கறவை மாடுகளை கொண்டு குறித்த பால் உற்பத்தியை முன்னெடுக்கின்றனர். தீவக மக்களின் நுகர்வை தாண்டி மேலதிகமாக நாளாந்தம் 2000 லீற்றர் பால் தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
அல்லைப்பிட்டி பகுதியில் இதுவரை 4000 அதிகமான மாடுகள் திருட்டுக் கும்பல்களால் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுவிட்டன.
இலங்கையில் 1959 ஆண்டின் 29 ஆம் இலக்கத்தில் கால்நடைகளை பாதுகாக்க சட்டம் இருக்கின்றது. ஆனால் அது முழுமைதாக நடைமுறையாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. கால்நடை திருட்டுக் கும்பலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் சட்டம் ஒழுங்கு தரப்பினருக்கு எமது ஒத்துழைப்பு இருக்கும் என போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

